தாருல் இஸ்லாம் ஃபவுன்டேஷன் டிரஸ்ட்

 

web counter


   
   
   

எமது பிரச்சார முயற்சிகள்

   
    வைகறை வெளிச்சம் பத்திரிகை சந்தாதாரர் ஆக வேண்டுமா? ஆம் எனில் இங்கே கிளிக் செய்யவும்.....    
   

படத்தொகுப்பை காண இங்கே சொடுக்கவும

 

உரிய முறையில் விளக்கிச் சொன்னால் அறிவுடையோர் அனைவரும் அட்டி இன்றி ஏற்றுக் கொள்வார்கள் இஸ்லாத்தை!  ஆய்ந்தறிந்த ஆய்வாளர்களைக் கவர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்.
மூடநம்பிக்கைகளுக்கும், முட்டாள்தனங்களுக்கும் அப்பாற்பட்ட மார்க்கம் இஸ்லாம்.
அதனால் பட்டிணங்களில் விவாத அரங்கங்களை நடத்துவது, பட்டிக்காடுகளில் மக்களை நேரில் சந்தித்து இஸ்லாத்தை சொல்வது.
சாதி ஒழிந்தது என்று நூலை மையப்படுத்தி தமிழகமெங்கும் 29 கருத்தரங்கங்களை நடத்தி இருக்கின்றோம்.  அல்ஹம்துலில்லாஹ்.
அதேபோல்தான்,  செந்தமிழ் நாட்டுச் சேரிகள் என்ற நூலும்.  இதையும், மையப்படுத்தி 20 கருத்தரங்களை நடத்தியுள்ளோம்.  அல்ஹம்துலில்லாஹ்!

சீர்காழியில் வசித்து வருபவர் நீதிபதி பா. கோபாலகிருஷ்ணன் அவர்கள்.  வசதியானவர், படித்தவர், சிந்தனையாளர்.  பெருவாழ்வு வாழ்ந்திட தகுதியானவர். 
ஆனால், ஜாதி கொடுமைகள், புறக்கணிப்புகள், அநீதிகள் இவற்றால் அடிமையாக வாழ்ந்திட வேண்டிய நிலையில் அவற்றை எதிர்த்தார், படித்தார், நீதிபதியானார், நீதிபதியான பின்பு நீதித்துறையின் ஜாதிய கொடுமைகளை சந்திக்க வேண்டிய அவலம் .  நீதிபதியாக இருந்து கொண்டே எதிர்த்தார்.  பெரும் போரை தொடர்ந்தார்.   நீதித்துறை யிலிருந்தும் எடுத்து வீசப்பட்டார்.
இந்நிலையில் நாம் சீர்காழியில் நடத்திய கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டார், கவரப்பட்டார், இஸ்லாத்தால்.  ஏற்றார் இஸ்லாத்தை.  இன்று அவர் பா. குலாம் முஹம்மத். (அல்ஹம்ந்துலில்லாஹ்)
அவர் தன்னுடைய அனுபவங்களை நூலாகவும் தந்தார்.  அதுவே, ஓரு  நீதிபதியின் விடுதலை முழக்கம் என்ற நூல்.  இந்த நூலை மையப் படுத்தி நீதித்துறையில் நடக்கும் ஜாதிய கொடுமைகளை எதிர்த்து வருகின்றோம். 
நீதித்துறையில் உலாவரும் நீதிபதிகளுக்கு இஸ்லாமே தீர்வு என்பதையும் எடுத்துச் சொல்லி இஸ்லாத்தின் பக்கம் அழைக்கின்றோம்.
நமது கருத்தரங்குகளிலும் - விவாத அரங்குகளிலும் வழக்கறிஞர்கள், பொது வுடைமைக் கருத்துக்குச் சொந்தக்காரர்கள், இவர்களெல்லாம் அழைக்கப்பட்டு, அவர் களின் கருத்துக்களுக்கும், எதிர்வாதங் களுக்கும் கண்ணியமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.  அதே கண்ணியத்தோடு அவர்களுக்குப் பதில்களும் தரப் படுகின்றன.
இந்த விவாதத்திற்குப் பின் அவர்களும் இஸ்லாத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்புகின்றார்கள்.  அல்ஹம்ந்துலில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
அல்லாஹ் அவர்களுக்கும் நேர் வழியை (ஹிதாயத்) வழங்கிடுவானாக!
இதுவரை இந்த நூலின் அடிப்படையில் ஐந்து கருத்தரங்குகளை நடத்தியுள்ளோம்
.

 

   
                     
   
வைகறை வெளிச்சம் இதழை இலவசமாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்
   
                     
பணிகள்
எங்களை பற்றி
முக்கிய இணைப்புகள்
தொடர்புக்கு
இப்பணியில் கடந்த 35 ஆண்டுகளாக இருந்து வருகிறோம். இஸ்லாத்தை எடுத்து சொல்வதும் அதனை ஏற்பவர்களை அரவணைப்பதும் அதில் ஏற்படும் இடையூறுகளுக்கு எதிராக போரிடுவதும் எங்களின் பணி

தாருல் இஸ்லாம் ஃபவுன்டேஷன் டிரஸ்ட் எண்.52/1 மண்ணடி தெரு, மண்ணடி,சென்னை - 1.தொலைபேசி 044 25224887 கைபேசி 8148129887 மின்னஞ்சல் darultrust@yahoo.com